நடிகர் விஜயின் 68வது படமாக உருவாகியுள்ளது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் 4வது சிங்கிள் ஆகஸ்ட் 31ம் திகதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இளைய தளபதியுடன் பார்ட்டி பண்ண ரெடியா…? என்ற கேள்வியுடன் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இளைய தளபதியாக இருந்த நடிகர் விஜய் தளபதியாக எப்போதோ மாறிவிட்டார்.
ஆனாலும் ஏஜிஎஸ் நிறுவனம் இளைய தளபதி என்று குறிப்பிட்டுள்ளதால் படத்தில் மகன் விஜயின் பாடல் தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான படத்தின் 3வது சிங்கிள் ரசிகர்களை கவர்ந்த நிலையில் நாளை வெளியாகவுள்ள இந்த பாடலும் மிகச் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







