மார்ச் 12′ இயக்கத்தின் ஏற்பாட்டில் சஜித் பிரேமதாஸ, நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, பா.அரியநேத்திரன் ஆகிய 4 ஜனாதிபதி வேட்பாளர்கள் கலந்துகொள்ளும் பகிரங்க விவாதம் இன்று சனிக்கிழமை (07.09) நடைபெறவுள்ளது.

கட்டம் கட்டமாக நடைபெறவுள்ள இப்பகிரங்க விவாதத்தில் பங்கேற்பதாக 38 வேட்பாளர்களில் 16 பேர் உறுதிப்படுத்தியிருக்கும் நிலையில், பிரதான வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் உள்ளடங்கலாக 22 பேர் தமது பங்கேற்பை இதுவரையில் உறுதிப்படுத்தவில்லை.

இன்று சனிக்கிழமை (07.09) பி.ப 3.00 – 5.00 மணி வரை நடைபெறவிருக்கும் இந்த விவாதம் சகல தொலைக்காட்சி அலைவரிசைகளிலும், மார்ச் 12 இயக்கத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்திலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

அதேவேளை விஜயதாஸ ராஜபக்ஷ, நுவன் போபகே, சரத் மனமேந்திர, அனோஜ் த சில்வா, ஓஷல ஹேரத் மற்றும் பிரியந்த விக்ரமசிங்க ஆகிய 6 வேட்பாளர்களின் பங்கேற்புடனான விவாதம் ஞாயிற்றுக்கிழமை (08.09), பாணி விஜேசிறிவர்தன, மயில்வாகனம் திலகராஜா, நாமல் ராஜபக்ஷ, கே.ஆர்.கிரிஷான், ரொஷான் ரணசிங்க மற்றும் கீர்த்தி விக்ரமரத்ன ஆகிய 6 வேட்பாளர்கள் கலந்துகொள்ளும் விவாதம் திங்கட்கிழமையும் (09.09) நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here