எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவிடக்கூடிய அனுமதிக்கப்பட்ட தொகை தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
காலி மாவட்ட செயலகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அதன் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒக்டோபர் 26 ஆம் திகதி நடைபெறும் என காலி மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தியோகபூர்வமாக நேற்றுமுன்தினம் அறிவித்தார்.
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 09 ஆம் திகதி ஆரம்பமான நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (12.09) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.








