அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொலை செய்யும் திட்டத்துடன் துப்பாக்கிகளுடன் வந்த நபர் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக டிரம்ப் அறிவிக்கப்பட்டதிலிருந்து அவரை கொலை செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், 3ஆவது முறையாக, டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது.

அமெரிக்கா – கோசெல்லாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் நபரொருவரை துப்பாக்கியுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

49 வயதான வெம் மில்லர் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here