கடந்த 7 நாட்களாக கொழும்பு கோட்டைக்கும் எல்லவுக்கும் இடையில் மட்டுப்படுத்தப்பட்டிருந்த மலைநாட்டுத் தொடருந்து சேவை இன்று முதல் வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் வழமைபோல தொடருந்து சேவைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய – இலங்கை கூட்டு முயற்சியிலான திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பின் காரணமாக, மலைநாட்டுத் தொடருந்து சேவை கடந்த 9 ஆம் திகதி முதல் நேற்றுவரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.








