இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் 50 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்குளிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் மாதம் ரூ. 100,000 தருவதாக சந்தேக நபர் கூறியுள்ளார்.

சந்தேக நபர் தொலைபேசி மூலம் பதில் OIC ஐ தொடர்பு கொண்டு இப்பகுதியில் போதைப்பொருள் கடத்தலை அனுமதிப்பதற்கு ஈடாக மாதத்திற்கு  ரூ.100,000 தருவதாக கூறியுள்ளார்.

இது தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்திய நிலையில், சந்தேகநபரின் கோரிக்கையை ஏற்று பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்துள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இவர் ஆரம்ப பணமாக ரூ.50,000 ஐ பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கொடுத்துள்ளார்.

சந்தேக நபர் மட்டக்குளிய பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here