தீக்காயங்களுக்கு உள்ளான 29 வயதுடைய பெண் ஒருவர் நேற்று (16.10) மாலை பகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் பகவந்தலாவ, கொட்டியாகல கீழ்மட்டத்தில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here