களுத்துறை வடக்கு குடுவஸ்கடுவ பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவரது சடலம் இன்று (18.10) வாதுவ தல்பிட்டிய பிரதேசத்தின் கரையில் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மொறொந்துடுவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் பாக்யவன் செல்வநாயகம் என்ற 26 வயதுடைய திருமணமானவர் எனவும் அவர் நுவரெலியா பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த இளைஞன் நேற்று விடுமுறை என்பதால் குடுவஸ்கடுவ கடற்கரைக்கு தனது நண்பர்களுடன் நீராடச் சென்றதாகவும், திடீரென அலையில் சிக்கி காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here