எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் 30.10.2024 இன்று  இடம்பெற்று வருகின்றது.

பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்புகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேலையில் கிளிநொச்சியிலும் சுமூகமான முறையில் இடம் பெற்று வருகின்றது.

பொலிஸார் தமது தபால் மூல வாக்குகளை அழிக்க விசேட தினமாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி பொலிஸார் தங்களது தபால் மூல வாக்குகளை கிளிநொச்சி மாவட்ட செயலகம்,  பொலிஸ் தலைமையக பொலிஸ் நிலையம் மற்றும் பிரதேச பொலிஸ் நிலையங்களில் வாக்களிக்கின்றனர்.

அத்துடன்,  கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்களிக்க 3656 பேர் தகுதி பெற்றுள்ளதுடன், 96 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கிளிநொச்சி  மாவட்டத்தில் வாக்களிப்பு செயற்பாடுகள் சுமூகமாக இடம்பெற்று வருகிறது. என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here