கொழும்பு – அவிசாவளை வீதியில் ஹோமாகம நகரத்தில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (11) காலை இடம்பெற்றுள்ளது.

அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று வீதியை கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது படுகாயமடைந்த பாதசாரி ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் தெடிகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய நபராவார்.

இதனையடுத்து, பஸ்ஸின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here