வெளிநாட்டு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிய தம்பதியொருவர் சியம்பலாகொட, பொல்கசோவிட பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஹதுடுவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 66 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் வேலை தேடுபவர்களை நேர்முகத் தேர்வுக்கு அழைத்து ரூ 200,000 முதல் ரூ. 300,000. வரை கட்டணம் வசூலித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நடவடிக்கையின் போது 20 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here