விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்த தாக்கல் செய்த மனுவுக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (19) சட்டமா அதிபருக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது.

இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஷனில் குலரத்ன, நீதிமன்றத்தில் ஆஜராகி, இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நான்கு வார கால அவகாசம் கோரினார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி சஞ்சய் இராஜரத்ன அந்தக் கோரிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்ததுடன், அதற்கான குறுகிய திகதியை வழங்குமாறு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 29ஆம் திகதிக்கு முன்னர் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு பிரதிவாதிக்கு உத்தரவிட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், மனுவை பரிசீலிக்க டிசம்பர் 9ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here