சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணிக்க விமானப்படை தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, இன்று புதன்கிழமை (27) விமானப்படையின் இல 07ம் படைப்பிரிவை சேர்ந்த பெல் 212 ஹெலிகொப்டர் அம்பாறை பகுதிக்கு கண்காணிப்புக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைகளின் போது ஏறாவூர் மைலவட்டவான் பிரதேசத்தில்வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிடு இருந்த நிலையில் இருந்த ஒருவர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு, பின்னர் மட்டக்களப்பு விமானப்படை தளத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்.








