செங்கலடி, மாவடிஓடையில் வெள்ளத்தில் சிக்கிய சிறு குழந்தை உட்பட மூன்று பேர் கொண்ட குடும்பத்தை இலங்கை கடற்படையினர் நேற்று மீட்டுள்ளனர்.
SLNS காஷ்யபா இந்த நிவாரண நடவடிக்கையை மேற்கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் விவசாய நிலத்தில் சிக்கித் தவித்த குடும்பத்தை வெற்றிகரமாக மீட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அக் குடும்பம் ஏறாவூர் மாவட்ட செயலகத்தில் இடம்பெயர்ந்தது.
சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மாவடிஒடை, மயிலவத்துவான் மற்றும் மண்முனை பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இலங்கை கடற்படை மூன்று வெள்ள நிவாரண குழுக்களை அனுப்பியதை அடுத்து மீட்பு நடவடிக்கை இடம்பெற்றது.
கடற்படையினர் 135 கூடுதல் நிவாரண குழுக்களையும் திரட்டியுள்ளனர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ உடனடியாக அனுப்பப்படுவதற்கு தயாராக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








