உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காகக் கோரப்பட்ட வேட்பு மனுவை இரத்து செய்து மீண்டும் புதிய வேட்பு மனு கோரப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற அங்கத்தவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தக் கூடிய தினம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க தலைமையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

எனினும், இறுதி திகதி தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை.

மீண்டும் கூடிய இறுதி தீர்மானத்தை எட்ட எதிர்பார்த்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here