வவுனியா, ஓமந்தை, பரசன்குளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01.12.2024) மாலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இளைஞன் ஒருவன் ஓமந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓமந்தை, பரசன்குளம் பகுதிக்கு கெப் வாகனத்தில் சென்ற குழு ஒன்று கொலை செய்யப்பட்டவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து காயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில்  வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவன் கெப் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், ஏனைய  சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here