இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் தொடர்பாக, தனது சொந்த ஆய்வுகள் மற்றும் பொதுமக்களின் கருத்தைப் பயன்படுத்தி முன்வைத்துள்ள பிரேரணை தொடர்பான இறுதி முடிவுக்கு வரவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஆய்வுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல்.சந்திரலால் தெரிவித்துள்ளார்.

இன்னும் இரண்டு வாரங்களில் பொதுமக்களின் கருத்துக்களை சேகரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய மின்சாரக் கட்டணத்தை அடுத்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களுக்குப் பேணுவதற்கு இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது.

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான தனது முன்மொழிவை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை சமர்ப்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here