வெல்லம்பிட்டிய மீதொட்டமுல்ல வைத்திய அதிகாரியின் அலுவலக கட்டிடத்திற்கு பின்புறம் உள்ள கொள்கலன் பெட்டியின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிரேசிலில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு மெகசீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
கிடைத்த தகவலின்படி, அந்த இடத்தில் நடத்திய சோதனையில், கொள்கலன் பெட்டியின் அடியில் தரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








