இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 184 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 474 ஓட்டங்களைக் குவித்தது.
துடுப்பாட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் சதம் கடந்து 140 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக 369 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்திய அணியின் சார்பில் நிதிஷ்குமார் ரெட்டி 114 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இந்தநிலையில் 105 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 234 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள இந்திய அணிக்கு 340 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதற்கமைய 340 எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 155 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.
பந்துவீச்சில் பெட் கம்மின்ஸ் மற்றும் ஸ்கொட் போலன்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன்படி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 எனும் அடிப்படையில் அவுஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.








