வத்தேகம பிரதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி கூரிய ஆயுதங்களால் நபர் ஒருவரை வெட்டிக் கொன்றதாகக் கூறப்படும் 3 சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று (08) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் 25, 35 மற்றும் 37 வயதுடைய கரந்தெனிய, கேகாலை மற்றும் ஹெட்டிமுல்ல ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here