மாத்தறை,தெவிநுவர, தல்பாவில பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கந்தறை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கருவாடு விற்பனையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் குறித்த வர்த்தகரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் வர்த்தகரின் வீட்டின் மேற்கூரை சேதமடைந்துள்ளதுடன் எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் வர்த்தகரின் வீட்டிற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here