முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவை வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவில் எதிர்வரும் திங்கட்கிழமை முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் ஒன்று சேர்க்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஜீப் ரக வாகனத்தைப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வாகனம் ஹப்புத்தளை பகுதியில் வைத்து வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டிருந்ததுடன் இது தொடர்பில் பண்டாரவளை நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.
இந்த நிலையில் வாக்குமூலம் பெறுவதற்காக வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் இரண்டு சட்டத்தரணிகளுடன் முன்னிலையாகியிருந்த அவர் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டவுடன் திடீரென சுகவீனம் ஏற்பட்டதாகத் தெரிவித்து அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.