எதிர்வரும் காலங்களில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இனி அனுமதி வழங்கப்பட மாட்டாது என அவர் தெளிவுபடுத்தினார்.
நேற்றிரவு (20) தொலைக்காட்சி நடப்பு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்தத் தீர்மானத்தை விளக்கிய அமைச்சர் ஹேரத், “தனிப்பட்ட வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களின் தேவையை நீக்கி, அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனங்கள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்” என்று குறிப்பிட்டார்.








