A little girl poses for photographs to illustrate the topic of child abuse in Canberra, Monday, Oct. 28, 2013. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING

ஏறாவூரில் நண்பியின் வீட்டுக்கு அவரை தேடிச் சென்ற சிறுவர் நன்னநடத்தை இல்லம் ஒன்றில் பராமரிப்பில் இருந்துவந்த 10 வயது சிறுமியை பாலியல்  துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 37 வயதுடைய நண்பியின் தந்தையாரை நேற்று வெள்ளிக்கிழமை (24/1/2025) இரவு கைது செய்துள்ளதுடன் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டதிலுள்ள பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த 10 வயது சிறுமியின் தாய் தந்தை சிறுமியை விட்டுவிட்டு வெவ்வேறு திருமணங்கள் செய்ததையடுத்து, கைவிடப்பட்ட  சிறுமியை பிரதேச சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் அவரை பராமரிக்க சிறுவர் நன்னடத்தை இல்லத்தில் ஒப்படைத்தனர்.

இதனடிப்படையில் ஏறாவூரிலுள்ள சிறுவர் நன்னநடத்தை இல்லம் ஒன்றில் பராமரிக்கப்பட்டுவந்த சிறுமி சம்பவதினமான நேற்று அருகிலுள்ள பாடசாலைக்கு சென்று பாடசாலை முடிந்தும் பகல் 2.00 மணியாகியும் மீண்டும் இல்லத்துக்கு திரும்பாததையடுத்து நன்னடத்தை உத்தியோகத்தர்கள் அவரை தேடி பாடசாலைக்கு சென்றபோது அவர் அங்கிருந்து காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து அவரை அந்த பகுதியில் தேடிவந்த நிலையில் அவர் அவரது நண்பியின் வீட்டுக்கு சென்றுள்ளர் என கண்டறிந்த உத்தியோகத்தர்கள் அங்கு சென்றபோது அங்கு சிறுமியின் நண்பி அவரது தாயார் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளதாகவும் அவரது தந்தையார் தனிமையில் இருந்த நிலையில் நண்பியை தேடி சென்ற சிறுமியை வீட்டினுள் கூட்டிச் சென்று அவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முற்பட்ட நிலையில் சிறுமியை அங்கிருந்து மீட்டுள்ளனர்.

இந்நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து குறித்த நண்பியின் 37 வயதுடைய கூலி தொழிலாளியான தந்தையாரை கைது செய்ததுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.

[மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here