ஏதிலிகளை நாடு கடத்தும் இராணுவ விமானத்தை தரையிறங்க அனுமதிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் விடுத்த கோரிக்கையை மெக்சிகோ நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க அதிகாரி ஒருவரையும், மெக்சிகோவின் அதிகாரி ஒருவரையும் மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
அமெரிக்க இராணுவ விமானம் கடந்த வெள்ளிக்கிழமை குவாத்தமாலாவுக்கு சுமார் 80 ஏதிலிகளுடன் இரண்டு விமானங்களை அனுப்பியது.
எவ்வாறாயினும், அமெரிக்காவுடன் மிகச் சிறந்த உறவை கொண்டிருப்பதாகவும், குடியேற்றம் போன்ற பிரச்சினைகளில் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் மெக்சிகோவின் வெளியுறவு அமைச்சு வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் ஒரு அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.
தங்கள் பிரதேசத்திற்கு மெக்சிகன்கள் வருவதை நாங்கள் எப்போதும் திறந்த கரங்களுடன் ஏற்றுக்கொள்வோம் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணத்தை மெக்சிகன் அதிகாரி தெரிவிக்கவில்லை, அதே நேரத்தில் வெளியுறவு அமைச்சும் இந்த சம்பவத்தைக் குறிப்பிடவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.








