வடக்கு தொடருந்து மார்க்கத்தின் புனரமைப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான இரவுநேர தொடருந்து சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த தொடருந்து மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளராக தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

வடக்கு தொடருந்து மார்க்கத்தின் புனரமைப்பு பணிகள் காரணமாக யாழ்ப்பாணத்திற்கான தொடருந்து சேவையினை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

தற்போது நிலவிய ஆளனி பற்றாக்குறை காரணமாக குறித்த தொடருந்து சேவையினை மீண்டும் ஆரம்பிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

இருப்பினும் அமைச்சரின் ஆலோசனைக்கமைய தொடருந்து சேவையினை வழமை நிலைக்கு கொண்டுவரும் வகையில், இரவுநேர தொடருந்து சேவை இன்று கொழும்பு கோட்டையில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கான ஏனைய அனைத்து தொடருந்து சேவைகளையும் விரைவில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளராக தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here