02 கிலோ குஷ் போதைப்பொருளுடன் விமானம் மூலம் இலங்கை வந்த சந்தேக நபரும் அவருக்கு உதவியவரும் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து விமானம் மூலம் குறித்த போதைப்பொருள்  கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படும் அதேவேளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவினரால் நேற்று (31/1/2025) இந்தச் சுற்றிவளைப்பின் பொது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 31 மற்றும் 36 வயதுடைய ஹங்வெல்ல மற்றும் உடுகம்பல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here