இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிறி வோல்ட்க்கும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் விஷேட சந்திப்பொன்று நடைபெற்றது .

இந்த சந்திப்பானது கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

சுவிட்சர்லாந்து போலவே தமது நாட்டிலும் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தியை மேம்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு சுவிட்சர்லாந்து தூதுவரிடம் எதிர்க்கட்சி தலைவர் கேட்டுக்கொண்டார்.

இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவும் கலந்து கொண்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here