நிறுத்தப்பட்ட மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டம் மீண்டும் தொடங்கும் என்றும், முதல் கட்ட கட்டுமானப் பணிகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தொடங்கும் என்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துணை அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய நிதிக்கு சீனாவின் EXIM வங்கியிடமிருந்து ஒப்புதலை இலங்கை எதிர்பார்க்கிறது என்று அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் சமீபத்திய சீன விஜயத்தின் போது இந்த திட்டம் தொடர்பாக நடைபெற்ற பயனுள்ள கலந்துரையாடல்களைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன மேலும் தெரிவித்தார்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்டம் கடவத்தையிலிருந்து மீரிகம வரை 37 கி.மீ. தூரத்தை உள்ளடக்கியது.








