இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகிறது.
அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டு போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணி பங்கேற்றுள்ளது.
இதன் முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 49 ஓட்டங்களினால் அவுஸ்திரேலிய அணியை வெற்றிகொண்டது.








