தனியார் பேருந்தை வழிமறித்து காரில் வந்த இரண்டு நபர்கள், அந்த வழித்தடத்தில் இயக்க பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை மிரட்டி கப்பம் கோரும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
பேருந்தில் இருந்த ஒரு பயணி பதிவு செய்த சம்பவத்தில், காரில் இருந்து ஒருவர் பேருந்தில் ஏறி, பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை வாய்மொழியாக திட்டுவதும், பின்னர் அவர்களைத் தாக்க முயற்சிப்பதும் காட்டப்பட்டுள்ளது.
வெல்லவாய பகுதியில் மஹியங்கனையிலிருந்து தனமல்வில நோக்கிச் சென்ற பேருந்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.







