நாடு முழுவதும் உள்ள 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 42 நீர்த்தேக்கங்கள் பலத்த மழை காரணமாக நிரம்பி வழிவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, அம்பாறை மாவட்டத்தில் 7, அநுராதபுரத்தில் 6, பதுளையில் 5, பொலன்னறுவையில் 3 மற்றும் திருகோணமலையில் 3 நீர்த்தேக்கங்களிலும் நிரம்பி வழிகின்றன.

இதேவேளை, மின்னேரியா, கவுடுல்ல, கந்தளாய், இராஜாங்கனை, லுணுகம்வெஹெர, சேனநாயக்க சமுத்திரம் மற்றும் பராக்கிரம சமுத்திரம் ஆகியவை நீர் நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்களில் முக்கியமானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், நீர் நிரம்பி வழிந்தாலும் நீர்த்தேக்கங்களில் மொத்த நீர் சேமிப்பு திறனில் 93 சதவீதத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here