ஏமன் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏமன் நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பல பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் செங்கடல் பகுதியில் கப்பல்களை வழிமறித்து தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார்.

அமெரிக்கர்களுக்கு எதிராக கடற்கொள்ளை, வன்முறை மற்றும் பயங்கரவாதத்தில் ஈடுபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தீர்க்கம் நிறைந்த மற்றும் சக்தி வாய்ந்த நடவடிக்கைகளை எடுக்கும்படி டிரம்ப் உத்தரவிட்டார்.

இதன்படி,ஏமன் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என ஹவுதிக்கு ஆதரவு அளித்து வரும் ஈரானுக்கும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

ஹவுதிக்கான ஆதரவை உடனடியாக நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது எனவும் மத்திய கிழக்கு பகுதியில் இது மிகப் பெரிய இராணுவ நடவடிக்கையாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here