யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியில் போட்டி போட்டு ஓடும் தனியார் பேருந்துகளினால் பயணிகள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (23/03/2025) கீரிமலையிலிருந்து யாழ். நகர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் சாரதியும், காரைநகரிலிருந்து யாழ்.நகர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் சாரதியுமே போட்டி போட்டுக்கொண்டு பேருந்தை செலுத்தியுள்ளனர்.
இதில் கீரிமலையிலிருந்து யாழ். நகர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் சாரதி சமிஞ்சை விளக்கினை உரியமுறையில் பயன்படுத்தி பேருந்தை செலுத்தியபோதும் காரைநகரிலிருந்து யாழ்.நகர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் சாரதி சமிஞ்சை விளக்கினை உரியமுறையில் பயன்படுத்தாது பேருந்தை செலுத்தியுள்ளார்.








