பாராளுமன்றத்தின் பிரதான நுழைவு வாயில் (தம்பதொர) பழுதடைந்துள்ளமையினால் இராணுவத்தினரை ஈடுபடுத்தி சீர்செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விசேட நிகழ்வுகளின்போது ஜனாதிபதியோ அல்லது பிற நாட்டுத் தலைவர்களோ இந்த செப்புக் கதவு வழியாகத்தான் பாராளுமன்றத்துக்குள் நுழைவார்கள்.
அறிக்கையின்படி, செப்புக் கதவை உயர்த்தவும் குறைக்கவும் பயன்படுத்தப்படும் “தாங்கி” பாகங்கள் தேய்ந்துவிட்டன. செப்புக் கதவு பழுதுபார்ப்பதற்குத் தேவையான உபகரணங்களை பாராளுமன்றம் வழங்குவதுடன், அதனைச் சரிசெய்வதற்கு இராணுவம் ஆட்களை வழங்குகிறது.
இதனிடையே, பாராளுமன்றத்தில் தேக்கமடைந்துள்ள மேலும் பல பொருட்களை சீர்செய்யும் முயற்சிகள் இந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.







