அமெரிக்க அரசின் சிறந்த நிர்வாகத்துக்கான துறையின் தலைவர் பதவியிலிருந்து, தொழிலதிபர் எலான் மஸ்க் விரைவில் விலகுவார், என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்ற பின் எலான் மஸ்க்கை சிறந்த நிர்வாகத்துக்கான துறைத் தலைவர் என்ற சிறப்பு பதவியில் அமர்த்தினார். அமெரிக்க அரசின் செலவுகளை குறைப்பது, நிறுவனங்களை சீரமைப்பது போன்ற பணிகள் எலான் மஸ்க்கிடம்  ஒப்படைக்கப்பட்டன.

மஸ்க் இந்த பதவியில் 130 நாட்கள் பணியாற்றுவதற்கு ஒப்புக் கொண்டிருந்தார். அவரின் பதவிக்காலம் மே மாத இறுதியில் முடிவடைகிறது. ஆனால் அதற்கு முன்னதாகவே மஸ்க் இந்த பதவியில் இருந்து விலகுவார் என ட்ரம்ப் தன் அமைச்சர்களிடம் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தன்னுடைய  நிறுவனப் பணிகளில் முழுமையாக கவனம் செலுத்துவதற்காகவே  மஸ்க் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here