அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை மொத்தம் 145 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னர் அறிவிக்கப்பட்ட 125 சதவீதத்தை விட இது அதிகம் என வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியுள்ளது.
ட்ரம்ப் சுமார் 60 நாடுகள் மீதான தனது “தீர்வை வரிகளை” 90 நாள் இடைநிறுத்துவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.








