ஹட்டன்-பொகவந்தலாவ பிரதான வீதியில் இன்று (30) காலை கார் ஒன்று விபத்துக்குள்ளானது.
ஹட்டனில் இருந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்குப் பயணித்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக நோர்வூட் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தனியார் பேருந்தொன்று குறித்த காரை முந்திச் செல்ல முற்பட்ட போது, எதிர்த் திசையில் வந்த பாரவூர்தியுடன் கார் மோதி, 60 அடி பள்ளத்தில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த நபர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.








