சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வந்த பெண் ஒருவர் நேற்று (04) தவறி விழுந்து உயிரிழந்ததாக நல்லதண்ணி காவல்துறை தெரிவித்துள்ளது.

அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்தார்.

உயிரிழந்த பெண் தனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் நல்லதண்ணி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here