சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பசறை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை – பசறை பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
14 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






