யாழ்ப்பாணம், தெல்லிப்பளைப் பகுதியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவரே கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடத்தப்பட்ட யுவதி, 22 வயதான இளைஞர் ஒருவரை பெற்றோர் சம்மதம் இன்றி திருமணம் செய்து தலைமறைவாக இருந்து வந்ததாகவும், அண்மையில் அவர்களின் இருப்பிடம் அறிந்த பெற்றோருக்கும் அவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்ததாகும் அதன் அடிப்படையில் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்ததாகவும் மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், வழக்கிற்காக குறித்த பெண் சென்றிருந்த போதே கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் கடத்தப்பட்ட வேளையில், நபர் ஒருவரால் எடுக்கப்பட்ட காணொளியை அடிப்படையாக வைத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here