பாணந்துறையின் பின்வத்த பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒரு பெண்ணின் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு 8:30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

அதிஷ்டவசமாக, யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.

போதைப்பொருள் வைத்திருந்ததாக பெண்ணின் மகன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் தொடர்பிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here