கல்கிஸ்ஸ பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
10 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரும் 5 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவரும் 5 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கைதான சந்தேகநபர்கள் 32, 39 மற்றும் 54 வயதுடைய மொரட்டுவ, இரத்மலானை மற்றும் கல்கிஸ்ஸ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.








