விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தைச் சேர்ந்த ஒப்பந்த அடிப்படையில் பல வருட காலம் பணிபுரியும் ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தை தவிர்ந்த விவசாய திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தைச் சேர்ந்த ஊழியர்களே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்ட கிளிநொச்சி மாவட்ட விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இறுதியாக 2014ஆம் ஆண்டு சில ஊழியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்ட போதும் ஏனையவர்களுக்கு இன்றுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

[கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்]








