போலந்து நாட்டின் வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி, இலங்கைக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை போலந்து ஏற்றுள்ள சூழலில் இவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இன்று (28) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இலங்கை வந்தடைந்த அவரை இலங்கையின் பிரதி வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமசந்திரா வரவேற்றார்.

அமைச்சர் சிகோர்ஸ்கி இன்று மாலையில் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத்தை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சர் சிகோர்ஸ்கி, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் பிரதிநிதியும் ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவருமான காஜா கல்லாஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here