பேர்லினின் பெல்வீவ் மாளிகையில் (Bellevue Palace) நேற்று (11) ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரை (Frank-Walter Steinmeier) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்துள்ளார்.
உத்தியோகபூர்வ அரச வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து, இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை-ஜெர்மன் நீண்டகால நட்பை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் சர்வதேச உறவுகளை மேலும் மேம்படுத்துதல், அத்துடன் தொழில் பயிற்சி மற்றும் சுற்றுலாக் கைத்தொழில் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.









