அனுரகுமார திஸாநாயக்கவின் விவாதத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமது பொருளாதாரக் கொள்கையை தெளிவுபடுத்துவதற்கு முதலில் கட்சிக்குள் தனியான கலந்துரையாடலை நடத்துமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் திஸாநாயக்கவின் பொருளாதாரக் கொள்கையானது ஏற்றுமதி அல்லது இறக்குமதியை மையமாகக் கொண்டதா என முன்னர் வினவிய போது அதற்கு தெளிவான பதில் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

திஸாநாயக்கவுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதற்கு முன்னர், சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோருடன் திஸாநாயக்க தனித்தனியாக கலந்துரையாடி தேசத்திற்கான தமது பொருளாதாரக் கொள்கையை தெளிவுபடுத்த வேண்டும் என விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here