Sunday, July 5, 2026
No menu items!

K Dilakshan

அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை…!

இந்த வருடத்தில் இதுவரை 40,494 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், அதிகளவான நோயாளிகள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அதன் எண்ணிக்கை 17,159 எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 10,150 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமையும்...

வெண்மையாக்கும் கிரீம்கள் குறித்து அதிர்ச்சி செய்தி..!

இணையத்தில் விற்கப்படும் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் மற்றும் லோஷன்களைப் பயன்படுத்தும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. இணையத்தில் விற்பனையாகும் சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம்களை பயன்படுத்துவதால் பல உடல்நல பிரச்சனைகள் எழுந்துள்ளன. மேலும், அழகுசாதனப் பொருட்கள் வர்த்தகத்தில் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் தொடர்பில் சிக்கல் நிலை காணப்படுவதாகவும் நுகர்வோர் விவகார அதிகார...

வாகன விபத்தில் ஒருவர் பலி…!

கிரிந்திவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெபிலியவல-ரதாவான வீதியின் நாதுன்கொல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பெபிலியவல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து, எதிரே வந்த இராணுவ லொறியில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். விபத்தில் காயமடைந்த நபர் ரதாவான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன்...

கண்ணாடிக் குவியலுக்கு அடியில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு…!

ஹுங்கமவில் உள்ள சுற்றுலா ஹோட்டல் வேலைத்தளத்தில் கொள்கலன்களை ஏற்றிச் சென்ற வாகனத்திலிருந்து கண்ணாடியை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர், கண்ணாடிக் குவியலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக ஹுங்கம பொலிஸார் தெரிவித்தனர். ஹுங்கம மேற்கு பகுதியை சேர்ந்த 45 வயது நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதிய கட்டுமான பணிகள் நடைபெற்று வரும்...

மறைத்து வைக்கப்பட்டிருந்த அரச வாகனம் மீட்பு…!

நுவரெலியாவில் அரச வாகனமொன்று மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த வாகனம் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பையா சதாசிவம் அவர்களின் சகோதரர் வீட்டில் நேற்று (12.10) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்படும் வாகனங்கள் ஏதேனும் ஒரு இடத்தில் மோசடியாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ...

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் தீவகப்  பகுதி கடற்றொழில் அமைப்புக்களுடன் சந்திப்பு…!

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வால்ஷ் யாழ்ப்பாணம், தீவகப்  பகுதி கடற்றொழில் அமைப்புக்கள் மற்றும் தீவகப் பெண்கள் வலையமைப்பின் பிரதிநிதிகளை நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார். யாழ். புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் சனசமூக நிலைய மண்டபத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதில் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா, மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர்...

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவு தயாரிப்பு நிலையங்களுக்கு தண்டம் விதிப்பு…!

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 09 உணவு தயாரிப்பு நிலையங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபை பொது சுகாதார பரிசோதகர்  தலைமையிலான அணியினர் வல்வெட்டித்துறை பகுதிகளில் இயங்கிய உணவு தயாரிப்பு நிலையங்களில் திடீர் பரிசோதனைகளை முன்னெடுத்தனர். இதன்போது, சுகாதார சீர்கேட்டுடன், சுகாதார...

ஆனந்த பாலித முன்வைத்த குற்றச்சாட்டு..!

அரசாங்கம் எரிபொருள் விலையை குறைக்கத் தவறியதாக ஐக்கிய கூட்டமைப்பு தொழிற்சங்க அமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பெட்ரோலிய கூட்டுத்தாபனம் லாபமீட்டும் நிலையில் எரிபொருள் லீட்டர் ஒன்றுக்கு மேலதிகமாக 50 ரூபா வரி அறவீடு செய்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பதவியை ஏற்றுக்கொள்ள முன்னதாக இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார் என ஆனந்த...

‘பதக்கம்’ சின்னத்தில் போட்டியிடும் சர்வஜன அதிகாரம் கட்சி..!

எதிர்வரும் நாடாளுமன்றத்தில் பலம்வாய்ந்த எதிர்க்கட்சியொன்றாக செயற்படுவதே தங்கள் இலக்காகும் என சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவி்த்துள்ளார். திலித் ஜயவீர தலைமையில்,  'பதக்கம்' சின்னத்தின் கீழ் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விசேட கூட்டம் ஒன்று நேற்றைய தினம்(12) மாலை வஸ்கடுவ ஹோட்டலில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே திலித் ஜயவீர மேற்கண்டவாறு...

129 சீன பிரஜைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பு…!

இணையத்தினூடாக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 129 சீன பிரஜைகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரைக்கமைய குறித்த விசாரணைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார். மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அலுவலகம் மற்றும் கண்டி...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோய் அதிகரிக்க முறையற்ற கட்டுமான பணிகளே காரணம்!

நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 2,300 ஆக அதிகரித்துள்ளதாகவும், திட்டமிடப்படாத கட்டுமான பணிகளால் உருவாகும் நுளம்பு இனப்பெருக்க பகுதிகளே இதற்கு முக்கிய காரணம் எனவும்...
- Advertisement -spot_img