Sunday, July 5, 2026
No menu items!

K Dilakshan

அதிகளவான அரசியல்வாதிகள் போட்டியிடாத முதல் பொதுத் தேர்தல்…!

நாடளாவிய ரீதியில் அதிகளவான அரசியல்வாதிகள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாதது இதுவே முதல் முறை என, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாக இவ்வருட தேர்தல் மிகவும் முக்கியமானது என சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். மேலும்,  இந்த வருடம் 50க்கும் அதிகமான அரசியல்வாதிகள் தேர்தலில்  இருந்து...

துண்டிக்கப்பட்ட மேல் மற்றும் தென் மாகாணங்களின் போக்குவரத்து…!

மேல் மற்றும் தென் மாகாணங்களில், வெள்ளம் காரணமாக பல வீதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதில் களுத்துறை மாவட்டத்திலேயே அதிகளவான வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, பண்டாரகம - கொலமதிரிய, பாலிந்தநுவர - பதுரலிய, பரல்லாவிட்ட - அவிட்டாவ, களுத்துறை - மத்துகம, புலத்சிங்கள - மொல்கா ஆகிய வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் மினுவாங்கொடை,...

மீள திறக்கப்பட்ட அலரி மாளிகைக்கு அருகில் உள்ள வீதியின் பாதுகாப்பு சாவடிகள் அகற்றம்…!

அலரி மாளிகைக்கு அருகில் கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் இருந்து ரொட்டுண்டா சுற்றுவட்ட வீதிக்கு செல்லும் வீதி பொதுமக்களின் பாவனைக்காக மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து, வீதியின் இருபுறமும் இருந்த பாதுகாப்பு சாவடிகள் கொழும்பு மாநகரசபையால் இன்று (11.10) அகற்றப்பட்டன. கடந்த 2005ம் ஆண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த வீதி 19 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. அதன் பிரகாரம், நீண்டகாலமாக பயணிக்க முடியாத நிலையில்...

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது…!

கல்கிசை பொலிஸ்  பிரிவுற்குட்பட்ட படோவிட்ட மற்றும் ஒபியன் சந்திக்கு அருகில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (11.10) கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இரு சுற்றிவளைப்புக்களின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இரத்மலானை மற்றும்...

சந்நிதியான் ஆச்சிரமத்தில் தெய்வீக இன்னி சை விருந்தும், உதவி வழங்கலும்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு  பேரவையின் ஏற்பாட்டில், பிரதி வெள்ளிக்கிழமைகளில் இடம் பெறும் வாராந்த நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் இன்று காலை 10:45 மணியளவில் ஆச்சிரம மண்டபத்தில் இடம் பெற்றது. பஞ்சபுராண ஓதுதலுடன் ஆரம்பமான நிகழ்வில் கலாவித்தகர் குணராசா நக்கீரன் அவர்களின்  குழலும், ...

விடுமுறை நாட்களிலும் பஸ் பருவச் சீட்டை பயன்படுத்த நடவடிக்கை…!

சனி, ஞாயிறு மற்றும் ஏனைய அனைத்து விடுமுறை நாட்களிலும் பாடசாலை மாணவர்கள், தொழிநுட்ப கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மாதாந்த பருவச் சீட்டைப் பயன்படுத்தி பஸ்களில் தடையின்றி பயணிக்க அனுமதிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத் போக்குவரத்து சபைத் தலைவருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். விடுமுறை நாட்களில் மாணவர்கள் மேற்கொள்கின்ற போக்குவரத்தின் போது பெரும் அசௌகரியங்களை...

ஆணொருவரின் சடலம் மீட்பு…!

புத்தளம், பல்லம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆடிகம -  ரஸ்நாயக்கபுர வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (11.10) காலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பல்லம பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் 65 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் இவர்  5 அடி 6 அங்குலம் உயரமுடையவர்...

வெள்ள அபாய எச்சரிக்கை…!

நிலவி வரும் கடும் மழை காரணமாக அத்தனகலு ஓயாவின் நீர் மட்டம் வெள்ள மட்டத்தை எட்டியுள்ளதாக, கம்பஹா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் அஜித் நிஷாந்த தெரிவித்துள்ளார். நேற்று (11.10) இரவு 9 மணி நிலவரப்படி, நீர்மானியின் நீர்மட்டம் 5.54 மீற்றராக காணப்படுவதாகவும், இதனால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் பிரதிப்...

பிரதமரின் புகைப்படங்களை பயன்படுத்துவது தொடர்பில் அறிவிப்பு…!

அரச நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளுக்கு பிரதமர் மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்கள் மற்றும் செய்திகளைப் பயன்படுத்துவதற்கு எழுத்துப்பூர்வ முன் அனுமதி பெறப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, இது தொடர்பில் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் பார்வைக்கு இணங்க, பொது நிதியை உகந்த முறையில் பயன்படுத்துவதற்காகவே, இந்த...

பாராளுமன்றத் தேர்தலில் 10,000 வேட்பாளர்கள் போட்டி…!

பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சுமார் 10,000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக 764 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் வேட்பு மனுக்களை சமர்ப்பித்துள்ள நிலையில், அதில் 74 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி,...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோய் அதிகரிக்க முறையற்ற கட்டுமான பணிகளே காரணம்!

நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 2,300 ஆக அதிகரித்துள்ளதாகவும், திட்டமிடப்படாத கட்டுமான பணிகளால் உருவாகும் நுளம்பு இனப்பெருக்க பகுதிகளே இதற்கு முக்கிய காரணம் எனவும்...
- Advertisement -spot_img