Sunday, July 5, 2026
No menu items!

K Dilakshan

மருமகனை தாக்கிய மாமனார்…!

பலாங்கொடை தஹமன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மருமகன் உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை (11.10) தெரிவித்தனர். பலாங்கொட தம்மானே பகுதியைச் சேர்ந்த 44 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைத் தாக்கச் செல்லும் போது மனைவியின் தந்தை...

விருப்பு எண்கள் வெளியிடுவது தொடர்பில் அறிவித்தல்…!

ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களுக்கு அமைய வேட்பாளர்களின் விருப்பு எண்கள் அடுத்த வாரத் தொடக்கத்தில் வெளியிடப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணி நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட...

ஜனாதிபதிக்கும் யு.எஸ்.எய்ட் பிரதானி சமந்தா பவருக்கும் இடையில் கலந்துரையாடல்…!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், யு.எஸ்.எய்ட் என்ற சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரகத்தின் பிரதானி சமந்தா பவருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தொலைகாணொளி ஊடாக நேற்று இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இலங்கைக்கும் யு.எஸ்.எய்ட்டுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும்...

இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்ட மாற்றம்…!

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.56 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.04 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை...

முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட 20 பேர் பொதுத் தேர்தலில் போட்டியிடாமலிருக்க தீர்மானம்…!

முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 20 பேர் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமலிருக்க தீர்மானித்துள்ளனர். அவர்களுள் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரபால சிறிசேன ஆகியோர் உள்ளடங்குகின்றனர். இவ்வாறு தீர்மானித்தவர்களுள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷமன் கிரிஎல்ல, ஷான் விஜயலால் த சில்வா,...

யாழ்.பலசரக்கு கடையில் போதை மாத்திரை விற்பனை…!

யாழ்ப்பாணத்தில் பலசரக்கு கடையொன்றில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த கடை உரிமையாளர் பொலிஸாரினால் நேற்று வெள்ளிக்கிழமை (11.10) கைது செய்யப்பட்டுள்ளார். இணுவில் வீதி மானிப்பாயில் பலசரக்கு கடையொன்றில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த கடையினை பொலிஸார் சோதனையிட்டனர். சோதனையின் போது கடையின் பின் பகுதியில் இருந்து 50...

பல கட்சிகள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவு…!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் பல கட்சிகள் தேர்தலுக்குப் பின்னர் அமைக்கப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன. கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணிகளில் போட்டியிட்ட பல கட்சிகள் தேசிய மக்கள் சக்தியின் கூட்டணியின் கீழ் போட்டியிட பேச்சுகள்...

ரயில் மோதியதில் தாயும் மகனும் பலி…!

திருகோணமலை - சீனக்குடா பகுதியில் நேற்று (11.10) பிற்பகல் ரயில் மோதி தாயும் மகனும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். சீனக்குடா பகுதியைச் சேர்ந்த ரன்மடு ஹேவகே நிஷாந்தி (வயது 47) மற்றும் அவரது மகன் ஷெஹான் ஜயம்பதி பெரேரா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். தந்தை கொண்டு வந்த உணவுப்பொதியினை வாங்கிக்கொண்டு ரயில் பாதையை கடக்கும் போதே இந்த விபத்து...

CBSL இன் வருடாந்திர நிதி நிலைத்தன்மை மதிப்பாய்வு..!

இலங்கை மத்திய வங்கி (CBSL) 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 70(1) இன் படி, 2024 ஆம் ஆண்டிற்கான அதன் வருடாந்த நிதி நிலைத்தன்மை மீளாய்வை (FSR) வெளியிட்டுள்ளது. CBSL இன் படி, இந்த சட்டரீதியான அறிக்கை நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையின் மதிப்பீட்டை வழங்குகிறது, அதனுடன்...

இரு வருட ஒப்பந்தம் வழங்கிய மே.இ.தீவுகள் கிரிக்கெட் சபை..!

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் வருடாந்த ஒப்பந்தத்தில் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 6 வீரர்கள் இரண்டு வருடங்களுக்கான தேசிய ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்டுள்ளனர். அதன்படி ஷைய் ஹோப், அல்ஷாரி ஜோசப், ஷெமார் ஜோசப், பிரெண்டன் கிங், குடகேஷ் மோட்டி மற்றும் ஜெய்டன் சீல்ஸ் போன்ற வீரர்கள் 2 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளனர்.

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோய் அதிகரிக்க முறையற்ற கட்டுமான பணிகளே காரணம்!

நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 2,300 ஆக அதிகரித்துள்ளதாகவும், திட்டமிடப்படாத கட்டுமான பணிகளால் உருவாகும் நுளம்பு இனப்பெருக்க பகுதிகளே இதற்கு முக்கிய காரணம் எனவும்...
- Advertisement -spot_img